CHAT NANBHARKAL

SIMPLY TYPE TAMIL FONT

PRIVATE CHAT

DISCLAIM

All images and videos posted in this blog were searched on the internet. Anyhow any of the posting is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.
Email us to : chatnanbharkal@gmail.com
Friday, 25 March 2011

சிரிங்க சிரிங்க வாய் விட்டு சிரிங்க 
==============================================

வந்தவர்: ஏங்க அந்தப் பொடியனை வேலைய விட்டு எடுத்துட்டீங்க?

ஹோட்டல் முதலாளி: பின்ன என்னங்க, சாப்பிட வந்தவங்க "டிபன் ரெடியா?"ன்னு கேட்டா "நேத்தே ரெடி"ங்கறான்!

==============================================

அந்தக் கல்யாணத்துல ரொம்ப ஈ மொய்க்குது, ஏன் ?

ஏன் ?

அது ஜாம் ஜாம்-னு நடக்கற கல்யாணம்

==============================================

எனக்கு தீபாவளிக்கு பருத்திப் புடவையும், வேலைக்காரிக்கு பட்டுப்புடவையும் 

வாங்கியிருக்கீங்களே .. . 

ஏன் ?

இதோ பாரு கமலா உனக்கு எது கட்டினாலும் எடுப்பா இருக்கும். 

ஆனா அவளுக்கு பட்டு புடவை மட்டும்தானே நல்லாயிருக்கு அதான

==============================================

என்ன டாக்டர் ஆபரேஷனுக்கு ஃபீஸ் வாங்கமாட்டீங்களா .. ?

ஆமாம். செய்கூலி இல்லை, ஆனா, சேதாரம் உண்டு.....

????????

==============================================

காக்காவுக்குப் ஒரு நாள் பயங்கரக் கடன். 

உடனே தன்னோட குஞ்சை அடகு வச்சுது. ஏன் ?

ஏன் ?

காக்கைக்குத் தன் குஞ்சும் பொன் குஞ்சு தானேய்....!!!

???????????

==============================================

ஜோன்ஸ் : தாம்பரம் ரெண்டு டிக்கெட் கொடுங்க.
கண்டக்டர் : இன்னொரு டிக்கெட் யாருக்கு?
ஜோன்ஸ் : ரெண்டுமே எனக்குத்தான். ஒன்னு தொலைஞ்சி போனா இன்னொன்னு உதவுமே.
கண்டக்டர் : அதுவும் தொலைஞ்சி போச்சுனா?
ஜோன்ஸ் : ஒன்னும் பிரச்சினை இல்ல. என்னோட பஸ் பாஸ் பத்திரமா இருக்கு.

==============================================

நர்ஸ் - ஆபரேஷன் தியேட்டர்ல வந்து கூட எதுக்கு டாக்டர் என்னை சில்மிஷம் பண்றீங்க 

டாக்டர் - புரியாமல் பேசாதே. .. 

பேஷண்ட்டுக்கு மயக்க மருந்து வேலை செய்யிதான்னு உன் மூலமா டெஸ்ட் பண்ணினேன், 

அவ்வளவுதான்

==============================================

உனது கடைசி ஆசை என்ன ? 

சரியாக வாதாடாமல், எனக்கு தூக்குத் தண்டனை கிடைத்ததற்குக் காரணமான எனது வக்கீலையும் என்னுடன் தூக்கில் போடவேண்டும்

==============================================

ஆபரேஷன் செய்வதற்கு முப்பதாயிரம் ரூபாய் பீஸ் சரி டாக்டர், அதென்ன ப்ளஸ் முந்நூறு 

அது, 

பாடியை வீட்டுக்கு எடுத்து போக ஆம்புலன்ஸ் வாடகை

==============================================

உங்களுக்கு ஜோசியத்துல நம்பிக்கை இருக்கா. .? 

கண்டிப்பா இருக்கே.

அப்ப ஒரு ஆயிரம் ரூபா கடன் கொடுங்க. 

அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ? 

அடுத்த வாரம் லாட்டரில எனக்கு லட்ச ரூபாய் பரிசு விழும்னு ஜோசியர் சொல்லி இருக்காரே

==============================================

என்னப்பா * காபியில ஈ செத்துக்கிடக்குது.. .? 

ஸ்பெஷல் காபியிலதான் சார் ஈ உயிரோட இருக்கும

==============================================

பார்பர் : “சார், கொஞ்சம் முகத்தை திருப்ப முடியுமா?

நபர் : “அதுக்குள்ளே இந்த பக்கம் முடிஞ்சுதா?

பார்பர் : “இல்லை சார். எனக்கு இரத்தம்னா அலர்ஜி.

==============================================

டிராபிக் போலிஸ் : “ரெட் சிக்னல் போட்டிருக்கே.. ஏன் நிக்காம போயிட்டு இருக்கே?

நபர் : “எனக்கு கண் தெரிஞ்சா நான் பார்த்திருக்க மாட்டேனா சார். ஆமா.. இதெல்லாம் 

கேக்கிறீங்களே நீங்க யாரு?

==============================================

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Powered by Blogger.

Viewers

Viewers Counter