CHAT NANBHARKAL

SIMPLY TYPE TAMIL FONT





PRIVATE CHAT

DISCLAIM

All images and videos posted in this blog were searched on the internet. Anyhow any of the posting is offensive to you, please, contact us asking for the removal. If you own copyrights over any of them and do not agree with it being shown here, please send us an email with ownership proof and we will remove it.
Email us to : chatnanbharkal@gmail.com
Friday 25 March 2011


சர்தார்ஜி ஜோக்ஸ்

==============================================

கொசுவலையுடன் போர்...!

==============================================


இந்தியாவுக்கும்-பாகிஸ்தானுக்கும் போர் நடந்துக் கொண்டிருந்த போது, எல்லையில் இந்திய வீரர்களை பாகிஸ்தானிய படைகள் சூழ்ந்துக் கொண்டனர். என்ன செய்வது என்று இந்திய வீரர்கள் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் திடிரென்று.ஒரு சர்தார் மட்டும் தன் மேல் கொசு வலை ஒன்றை சுற்றிக் கொண்டு, மறைவிடத்தை விட்டு வெளி வந்து பாகிஸ்தானிய வீரர்களை நோக்கி சுட ஆரம்பித்தார். நிலைகுழைந்த பாகிஸ்தானிய வீரர்கள் ஓடி விட்டனர். சர்தாரின் வீர செயலை பாரட்டி எல்லோரும், சர்தாரிடம் கொசு வலையை போர்த்திக் கொண்டு எப்படி உங்களுக்கு இவ்வளவு தைரியம் வந்தது என்று கேட்டனர். அதற்கு சர்தார் சொன்னார், "எல்லாம் கொசு வலையை போர்த்திக் கொண்டால் குண்டு துலைக்காது என்கிற தைரியத்தில்தான், இவ்வளவு சின்ன கொசுவினாலேயே இதனுல் நுழைய முடியவில்லையே, அதை விட பெரிய தோட்டா எப்படி நுழையும்" என்றார்..இராணுவத்திலிருந்து இந்த சர்தாருக்கு ஓய்வு கிடைத்த பிறகு அவருடை மகனுக்கு அங்கே வேலை கிடைத்தது. இன்னொரு முறை போர் நடந்துக் கொண்டிருந்த போது, எல்லையில் இந்திய வீரர்களை பாகிஸ்தானிய படைகள் சூழ்ந்துக் கொண்டது. இம்முறை சர்தார்(மகன்) மட்டும் மறைவிடத்தை விட்டு வெளி வந்து பாக்கிஸ்தானிய வீரர்களை நோக்கி சுட ஆரம்பித்தார். ஆனால் எதிரிகள் திருப்பி சுட்டதில் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் ஹாஸ்பிடலில் சேர்க்கப் பட்டார். அங்கு அவரை பார்க்க வந்த சகவீரர் ஒருவர் கேட்டார் "உன் அப்பாவாவது உடம்பில் கொசுவலையை போர்த்திக் கொண்டு எதிரியை நோக்கி சுட்டார், நீ ஏன் ஒன்றுமே அணியாமல் வெளியே வந்தாய்?" அதற்க்கு சர்தார் சொன்னார், "நான்தான் உடம்பில் ஓடோமாஸ் (கொசு கடிக்காமல் இருக்க உடம்பில் சிக்கொல்லும் ஒரு வகை மருந்து) சியிருந்தேனே" என்றார்.

==============================================

எத்தனை கோழி...?
==============================================
ஒரு முறை சர்தார் தெருவில் நடந்து வந்துக் கொண்டிருந்தார், அப்போது அவருடையை நண்பர் ஒருவர் சந்தைக்குப் போய்விட்டு கையில் ஒரு பையுடன் அவ்வழியே திரும்பிக் கொண்டிருந்தார்.
சர்தார்: "மூட்டையில என்ன அண்ணே இருக்கிறது?"
நன்பர்: "வேறொன்றுமில்லை கோழிதான்.."
சர்தார்: "அண்ணே பையில் எத்தனை கோழிகள் இருக்கிறது என்று நான் சரியாக சொன்னால், எனக்கு ஒரு கோழி தருகிறீர்களா ?
நண்பர்: "ஒன்னு என்ன இந்த இரண்டையுமே நீ எடுத்துக் கொள்"
சர்தார்: "அஞ்சு கோழி , சரியா?.."

==============================================

அடி வாங்கிய சர்தார்கள்...!
==============================================
இரண்டு சர்தார்கள் ஹாஸ்பிடலில் பக்கத்து பக்கத்து பெட்களில் உடல் முழுவதும் பலத்த அடி காயங்களுடன் சேர்க்கப் பட்டிருந்தனர். இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, பரஸ்பரம் தங்களுக்கு எப்படி இந்த தர்ம-அடி கிடைத்தது என்பதைப் பற்றி விவரித்தனர்.
முதல் சர்தார் சொன்னார்.."நானும் என் மகனும் ஒரு நாள் கூட்டமான பஸ்ஸில் பயணம் செய்துக் கொண்டிருந்தோம். பஸ்ஸில் நாங்கள் நின்றுக்கொண்டு பயணம் செய்தோம், அப்போது என் மகனின் கையிலிருந்த போட்டோ ஒன்று தவறி கீழே விழுந்து விட்டது. விழுந்த போட்டோ நேரே அங்கே நின்றுக்கொண்டிருந்த பெண்ணின் காலடியில் விழுந்து விட்டது. போட்டோவை புடவை மறைத்துக் கொண்டிருந்ததால், அதை எடுப்பதற்க்காக அந்த பெண்ணருகில் சென்று ஒரு வார்த்தை கேட்டேன், அவ்வளவுதான் அந்த பஸ்ஸில் என்னை அடிக்காத ஆளே இல்லை, பின்னி விட்டார்கள்".
'அப்படி என்னதான் அந்த பெண்ணிடம் நீங்க கேட்டீங்க?' என்றார் மற்ற சர்தார். 
"என்ன, புடவையை து¡க்கிக்குங்க போட்டோ எடுக்கனும்னு சொன்னேன்....அவ்வளவுதான்".

இரண்டாவது சர்தார் தன் கதையை சொன்னார்..ஒரு நாள் வேலை விசயமாக, என் ஊரிலிருந்து நு¡று கி.மீ. தொலைவில் உள்ள இடத்துக்கு போக வேண்டியிருந்தது. அங்கு ஒரே நாளில் வேலையை முடித்து விட்டு , அன்று இரவே வீடு திரும்பிவிட வேண்டுமென நினைத்திருந்தேன், ஆனால், அன்று வேலை முடியவில்லை. அன்றிரவு அங்கு தங்க வேண்டி வந்தது. துரதிஸ்டவசமாக அங்குள்ள எல்லா ஹோட்டல்களும் காலியில்லை. வேறு வழியில்லாமல் அருகில் உள்ள ஒரு வீட்டில் போய் என்னுடைய நிலைமையை சொல்லி அன்றிரவு அங்கு தங்கிக் கொள்ளவா என்றுக் கேட்டேன், அதற்கு அவர்கள் "எங்கள் வீட்டில் வயசுக்கு வந்த பெண்கள் இருக்கிறார்கள், அதனால் நீங்கள் இங்கு தங்க முடியாது" என்று சொல்லி விட்டார்கள். அதற்க்கு அடுத்த வீட்டிற்க்கு போனேன், அங்கேயும், வயசுக்கு வந்த பெண்கள் இருந்ததால் மறுத்துவிட்டார்கள். இரண்டு வீட்டிலும் மறுத்து விட்டார்களே என்று கேட்கும் போதே மாற்றி கேட்போம் என்று மூன்றாவது வீட்டில் போய் கேட்டேன், அவ்வளவுதான் அடித்து நொறுக்கி விட்டார்கள். அப்படி என்ன கேட்டிர்கள்? என்றார் மற்ற சர்தார். "வேறு என்ன, உங்க வீட்ல வயசுக்கு வந்த பொண்ணுங்க இருக்கா, நான் இன்னைக்கு நைட்டு இங்க தங்கனும், என்றேன், அவ்வளவுதான்.."

==============================================

ஏன் குதிக்கிறாய்...?
==============================================
தெருவில் நடந்து வந்துக் கொண்டிருந்த சர்தாருக்கு தெரு ஓரத்தில் குதித்துக் கொண்டிருந்த ஒரு ஆளைப் பார்த்ததும் அவனருகில் சென்று பார்க்க ஆர்வம். அந்த ஆள் ரோட்டில் இருந்த மேன்-ஹோல் மூடியின் மீது இருபத்தி மூனு.. இருபத்தி மூனு.. என்று எண்ணிக் கொண்டு குதித்துக் கொண்டிருந்தான்.
சர்தார் ஆர்வம் தாங்காமல் அவனிடம் போய், என்ன விசயம் இருபத்தி மூனு.. இருபத்தி மூனுன்னு குதிச்சுகிட்டிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன் சொன்னான், நான் என்னவென்று சொல்வதைவிட நீயே போய் உள்ளே பார்த்தால் நல்லா தெரியும் என்று சொன்னான். சர்தாரும் குழிக்குள் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்க்க உள்ளே இறங்கினார். அவ்வளவுதான், அந்த ஆள் உடனே மேன்-ஹோலை மூடியை போட்டு மூடிவிட்டு அதன் மேல் ஏறி மறுபடியும் குதிக்க ஆரம்பித்துவிட்டான். ஆனால் இந்த முறை இருபத்தி மூனுக்கு பதில், இருபத்திநாலு.. இருபத்திநாலு.. என்று எண்ணத் தொடங்கினான்....

==============================================


கொலஸ்ட்ரால் எங்கே...?
==============================================
ஒரு முறை சர்தார் சூப்பர் மார்கெட்டுக்கு சன் ஃபுளவர் (Sunflower) ஆயில் வாங்க சென்றிருந்தார். உயர்தர ஆயில் பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு கடைகாரரிடம் வந்து காசை கொடுத்து விட்டு 'கொலஸ்ட்ரால் கொடுங்க' என்றார். கடைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை.
'சாரி, கொலஸ்ட்ரால் எல்லாம் விற்பதில்லை' என்று கடைக்காரர் சொன்னார். உடனே சர்தாருக்கு கோபம் வந்து விட்டது, 'நான் என்ன இளிச்சவாயனா, என்னை ஏமாற்ற முடியாது, இப்ப கொலஸ்ட்ராலை கொடுக்கிறாயா இல்லையா?' என்று சத்தம் போட ஆரம்பித்து விட்டார். உடனே கடைக்காரர் ரொம்ப பொறுமையாக சர்தாரிடம், 'இந்த பாருங்க இங்க மட்டும் இல்லை, நீங்க எங்க போனாலும் கொலஸ்ட்ராலை வாங்க முடியாது' என்றதற்க்கு, சர்தார் உடனே சொன்னார், "அப்ப ஏன்யா இந்த பாட்டிலில் "Colestrol FREE" ன்னு எழுதியிருக்கு.." 

==============================================
 
பந்தயம் கட்டிய சர்தார்...!
==============================================சோகமே உருவாக உட்கார்ந்திருந்த பந்தா சிங்கிடம் அவருடைய நன்பர் அருகில் வந்தமர்ந்து, ஏன் சோகமாக இருக்கிறாய் என கேட்டார். அதற்க்கு பந்தா சிங், தான் பந்தயத்தில் ரூ.800 தோற்று விட்டதாக சொன்னார். நன்பர் எப்படி 800 ரூபாயை தொலைத்தாய் என்றதற்க்கு சர்தார் பந்தா சிங் சொன்னார், "நேற்று நடந்த இந்திய-இலங்கை கிரிகெட் மேட்ச்சில் இந்தியா ஜெயிக்கும் என ரூபாய் 400 பந்தயம் கட்டினேன், ஆனால் இந்தியா தோற்று போய் விட்டது.." என்றார். நன்பர், "சரி மீதி ரூ.400 எப்படி தொலைந்தது?" என்றதற்க்கு பந்தா சிங் சொன்னார், "அன்றிரவு பார்த்த ஹை-லைட்டிலும் பந்தயம் கட்டினேனே.." என்றார். 

==============================================
 
எய்ட்ஸ் பயமா...?
============================================== 
ஒரு முறை சர்தாரும் நண்பர்களும் (சர்தாரல்லாத) இரவில் தெரு வழியே வந்துக் கொண்டிருந்த போது ஒரு வழிபறியிடம் மாட்டிக் கொண்டனர். வழிபறி தன் கையில் டாக்டர் போடும் ஊசி (சிரின்ச்) ஒன்றை வைத்துக் கொண்டு, அதில் எயிட்ஸ் நோய் உள்ள இரத்தம் உள்ளதாகவும், தன்னிடம் உள்ளதை தர மறுப்பவர்களை குத்த போவதாகவும் மிரட்டினான். பயந்து போன எல்லோரும் தன்னிடமிருந்த பணம், கடிகாரம், மற்றும் மதிப்பு மிக்க பொருட்களை கலட்டி கொடுத்து விட்டனர். ஆனால் நம் சர்தார் மட்டும் தைரியமாக, எதையும் கொடுக்க மறுத்து விட்டார். கோபமான வழிபறி ஊசியால் சர்தார் கையில் குத்தி விட்டு ஓடிவிட்டான். சர்தார் கவலை படவில்லை. மற்றவர்கள் பதறி போய், சர்தாரிடம் "ஏன் இப்படி செய்தாய், இப்ப உனக்கு எயிட்ஸ் வந்து விடுமே "என்று கேட்டதற்கக்கு சர்தார் கூலாக சொன்னார், "எனக்கு அதுலாம் வராது ஏன்னா நான்தான் காண்டம் அணிந்திருக்கேனே" என்றார்.

==============================================

ஸ்மைல் ப்ளீஸ்...!
==============================================
 ஒரு சர்தார்ஜி புகைப்படக்காரரை ஒரு சாவு வீட்டில் பத்து பேர் சேர்ந்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வழியாகச் சென்ற ஒருவர் "ஏங்க அவரைப் போட்டு அடிக்கறாங்க?" என்று மற்றொருவரைக் கேட்கிறார். "பின்ன என்னங்க? இறந்தவர் உடலைப் போட்டோ எடுக்கச் சொன்னால் ஸ்மைல் ப்ளீஸ் என்றால் என்ன செய்வார்களாம்?".

==============================================

நேர்முகத்தேர்வில் சர்தார்ஜி...!
==============================================சர்தார்ஜி ஒருவர் இரயில் நிலைய அதிகாரி பதவிக்கான இண்டர்வியூவில் கலந்து கொண்டார். இரண்டு இரயில்கள் அதிவேகமாக எதிரெதிரே ஒரே பிளாட்பாரத்தில் வருவதை அறிந்தால் நீங்கள் முதலில் என்ன செய்வீர்கள் என்று அதிகாரி கேட்க, அதற்கு சர்தார்ஜி இவ்வாறு பதில் சொன்னாராம், “நான் முதலில் திரு. பாண்டா சிங் அவர்களுக்குத் தகவல் தெரிவிப்பேன்”. யார் அந்த பாண்டா சிங் என்று அதிகாரி கேட்டார். சர்தார்ஜி சொன்னார், “பாண்டா சிங் என் தம்பி. அவன் இது வரை ஒரு இரயில் விபத்தைக் கூட நேரில் பார்த்ததேயில்லை.


==============================================  
கண்ணாடிக் கடையில் சர்தார்ஜி...!

==============================================சர்தார்ஜி: ஒரு கண்ணாடி குடுங்க... கடைக்காரர்: இந்த கண்ணாடியை வாங்குங்க சார். இதுல என்ன விசேஷம்னா, 100 அடி உயரத்தில இருந்து போட்டாலும், முதல் 99 அடி வரைக்கும் இந்த கண்ணாடி உடையவே உடையாது.. சர்தார்ஜி: சூப்பர். முதல்ல அதுக்கு பில் போடுங்க.


==============================================

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...
Powered by Blogger.

Viewers

Viewers Counter